விபத்து தடுப்பு நடவடிக்கைகள் தேவை: கிராம ஊராட்சி சார்பாக ஆட்சியரிடம் மனு

முத்தியால்பேட்டை - ராஜகுளம் சாலையில் களியணூர் கிராம சாலையில் வேகத்தடை சாலை ஒளிரும் ஸ்டிக்கர் ஓட்ட கோரிக்கை

Update: 2022-05-09 16:00 GMT

: மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலையை இணைக்கும் புறவழி சாலையாக களியனூர்  சாலை அமைந்துள்ளது.

காஞ்சிபுரம் நகரிலிருந்து பொதுமக்களும்  வேலூர் பகுதியில் இருந்தும் வரும் பொதுமக்கள் செங்கல்பட்டு வழியாக  சென்னை - திருச்சி சாலையில் இணைவதற்கு போக்குவரத்து நெரிசலற்ற புறவழி சாலையாக உள்ளதால் அதிக வாகனங்கள் 24நேரமும்  பிஸியாகவே இதில் பயணிக்கும் நிலை  உள்ளது. குறிப்பாக களியனூர் ஊராட்சி பகுதிகளில் வளைவுகள் , பள்ளிகள் மற்றும் கிராம இணைப்பு சாலைகளில் வரும் வாகனங்களால் வாகன விபத்து அடிக்கடி நடைபெறுகிறது. இதில் பலர் உடல் உறுப்புகளை இழக்கும் நிலை ஏற்படுகிறது.

இதனை தவிர்க்க சாலை தடுப்பு, வேகத்தடை, சாலைகளில் ஒளிரும்  சமிக்ஞைகள் மற்றும் விபத்து பகுதி அறிவிப்புகள் உள்ளிட்டவைகளை பொருத்த கோரி ஊராட்சி மன்ற தலைவி வடிவுக்கரசிஆறுமுகம் சார்பில் கிராமத்தினர்  மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியிடம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தனர். அவர்களிடம் விபத்து குறைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.


Tags:    

Similar News