தேர்தலில் போட்டியிட இரு தவணை தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் கட்டாயம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்கள் இரு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் கட்டாயம் இணைக்க வேண்டும்..

Update: 2022-01-28 14:00 GMT

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் இன்று காலை முதல் தேர்தலில் போட்டியிடும் அவர்கள் விண்ணப்பங்களை வாங்கிச் சென்று வருகின்றனர்.

தேர்தலில் போட்டியிடும் நபர்கள் கட்டாயம் தடுப்பூசி இரு தவணைகளில் செலுத்தி இருக்க வேண்டும் எனவும்,  அதற்கான சான்றிதழ்களை தேர்தல் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும் எனவும் கூறி விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

நாளை காஞ்சிபுரம் மாவட்டத்தின் முழுவதும் 385 இடங்களில் ஒருநாள் தடுப்பூசி 20ஆவது சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதில் செலுத்திக் கொள்ள தேர்தல் முகவர்கள்,  தேர்தல் போட்டியாளர்கள் என அதிக அளவு நபர்கள் நாளை தடுப்பூசி செலுத்திக் கொள்ள இம் முகாம் வாய்ப்பாக இருக்கும் எனவும் தெரிய வருகிறது.

Tags:    

Similar News