ஸ்ரீபெரும்புதூர் அருகே சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த போக்குவரத்து காவலர்

ஸ்ரீபெரும்புதூர் போக்குவரத்து காவலராக முத்துக்குமார் என்பவர் பணிபுரிந்த நிலையில் லாரி மோதி உயிரிழந்தார்.

Update: 2024-03-24 13:37 GMT

ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் போக்குவரத்து காவலர் லாரி மோதி பலியான சம்பவத்தில் அவரது உடலுக்கு மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஸ்ரீபெரும்புதூர் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்தை சீர் செய்து கொண்டிருக்கும் பொழுது பின்னால் வந்த லாரி மோதியதில் கால் துண்டாகி ரத்த வெள்ளத்தில் போக்குவரத்து காவலர் உயிரிழந்தார்.

காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் போக்குவரத்து காவலர் முத்துக்குமரன் (வயது45). இவர் ஸ்ரீபெரும்புதூரில் போக்குவரத்து காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இன்று ஸ்ரீபெரும்புதூர் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் திருவள்ளூர் சாலை இனையும் கூட்டு சாலையில் போக்குவரத்தை சீர் செய்து கொண்டிருக்கும் பொழுது பின்னால் கலவை இயந்திரத்தை இழுத்து வந்த 407 கூண்டு வண்டி பிரேக் நிற்காமல் மோதியதில் முன்னாள் சென்ற கண்டைனர் லாரி என இரு வண்டிகளுக்கிடையே மாட்டி வலது கால் முழுவதுமாக முறிந்து இரத்த வெள்ளத்தில் மிதந்தார் .


உடனே அவரை மீட்டு தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கொண்டு செல்லும் வழியிலே உயிரிழந்தார். தற்போது பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் போக்குவரத்து காவலர் முத்துக்குமரன் உடல் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

போக்குவரத்தை சீர் செய்து கொண்டிருக்கும் பொழுது லாரி மோதி படுகாயமடைந்து போக்குவரத்து காவலர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், சக காவலர்களிடையே சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News