உரிய ஆவணங்கள் இன்றி செயல்பட்ட 53 ஆட்டோக்கள் பறிமுதல்

காஞ்சிபுரம் நகரில் போக்குவரத்துக்கு பெரிதும் இடையூறாக செயல்படுவதாக ஆட்டோ ஓட்டுநர்கள் மீது குற்றச்சாட்டு இருந்த நிலையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

Update: 2022-09-19 05:15 GMT

முறையான ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்ட ஆட்டோக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு நிறுத்தப்பட்டுள்ளது.

பட்டு நகரம் கோயில் நகரம் என புகழ் பெற்ற காஞ்சிபுரத்திற்கு நாள் தோறும் வெளிமாநில , வெளிநாட்டு பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் நாள்தோறும் ஆயிரம் கண்கள் காஞ்சிபுரம் வந்து செல்கின்றனர்.

மேலும் காஞ்சிபுரம் நகரி திருவிழா காலங்கள் மற்றும் திருமண நாட்கள் உள்ளிட்ட நாட்களில் பெரும் போக்குவரத்து நெரிசலும், அரசு வேலை  பள்ளி நேரங்கள் என அனைத்து  நேரங்களிலும் கடும் போக்குவரத்து நிலவுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதற்கு மிக முக்கிய காரணமாக ஆட்டோக்கள் இயங்குவது என்பதும் பெரும் குற்றச்சாட்டாக இருந்த நிலையில் காஞ்சிபுரம் வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் கா. பன்னீர்செல்வம் கடந்த மூன்று நாட்களாக காஞ்சிபுரத்தின் பல்வேறு இடங்களில் வாகனத்தின் மேற்கொண்டு இருபதுக்கும் மேற்பட்ட ஆட்டோக்களை பறிமுதல் செய்து அதற்கு அபராதமாக இரண்டு லட்ச ரூபாய் விதித்தார்.

மேலும் காஞ்சி மாவட்ட காவல்துறை சார்பில் விஷ்ணு காஞ்சி சிவகாஞ்சி மற்றும் தாலுகா காவல் நிலையத்தின் சார்பில் நேற்று திடீரென பல்வேறு இடங்களில் ஆட்டோக்களின் ஆவணங்கள் சரிபார்ப்பு தணிக்கை நடைபெற்றது.

இதில் முறையான ஆவணங்கள் இன்றி செயல்பட்டு வந்த 53 ஆட்டோக்களை காவல்துறை பறிமுதல் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருகே நிறுத்தி வைத்துள்ளனர்.

மேற்கூறிய காரணங்களை சரி செய்து ஆட்டோக்களை பெற்றுக் கொள்ளுமாறும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்று காலை முதலும் ஆட்டோக்களின் ஆவணங்கள் சரிபார்ப்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News