முகவரி மாற்றி கொடுத்த 2382 கொரோனா நோயாளிகள்: காஞ்சி மக்களே உஷார்...!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா உறுதியான 2382 பேர் கொடுத்த முகவரிகள் அடையாளம் காணப்படாததால் அச்சம் எழுந்துள்ளது.

Update: 2021-05-30 13:30 GMT

கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்ற காட்சி.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாகவே கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகளவில் இருந்து வந்தது. இதன் பாதிப்பை குறைக்கும் வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் கொரோனா  பரிசோதனை முகாம்கள் அதிக அளவில் நடத்தப்பட்டடன.

இம்முகாமில் கலந்துகொள்பவர்கள் தங்கள் முகவரி‌, தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்கள் அவர்களிடமிருந்து பெறப்பட்ட பின் பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டது. நாள்தோறம் எடுக்கப்படும் பரிசோதனை மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு தொற்று பாதிப்பு குறித்து கண்டறியப்படுகிறது.

தொற்று பாதிக்கப்பட்டவர்களை சுகாதாரத்துறை மற்றும் பெருநகராட்சி ஊழியர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நோக்கில்  தொலைபேசியில் அழைக்கும் போது தொலைபேசியை தவிர்த்தும் , உபயோகத்தில் இல்லாத எண்களையும் வழங்கி உள்ளது தெரியவந்தது.

மேலும் முகவரியை கண்டுபிடிக்க சென்றால் முகவரியில் இது போன்ற ஆட்கள் இல்லை என கூறும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 8 நாட்களில் 2382 நபர்கள் இதுபோன்ற நிலையில் உள்ளதும் இவர்களுக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டார்களா அல்லது இவர்கள் இதை மறைத்து நோய் பரவலுக்கு காரணமாகி விடுகிறார்களா என்று தெரியாமல்  சுகாதாரத்துறை  குழம்பி வருகிறது.

கடந்த 8 நாட்களில் பாஸிடிவ் கண்டறியப்பட்ட 6431  பேரில் இவர்கள் 37% பேர் ( 2382) என தெரியவருகிறது.. முழு முகவரியையும் சரியாக அளித்தால் மட்டுமே நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும் என்பதை இவர்கள் ஏனோ அறியவில்லை. 

Tags:    

Similar News