2 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு துவங்கியது: ஆர்வத்துடன் வாக்களிக்க குவிந்த பொதுமக்கள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு துவங்கியது ஆர்வத்துடன் பொதுமக்கள் வாக்களித்து வருகின்றனர்.

Update: 2021-10-09 02:00 GMT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் ஒன்றியங்களில் இன்று நடைபெறுகிறது.

நேற்று மாலையே வாக்கு சாவடிகளுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் வழங்கப்பட்டு இன்று காலை  6: 30 மணி அளவில் வாக்குச்சாவடியில் வேட்பாளர் முகவரின் முன்னிலையில் வாக்குப் பெட்டி க்கு சீல் வைக்கப்பட்டது.


காலை 7 மணிக்கு சரியாக வாக்குப்பதிவு துவங்கியது. காலை முதலே 200க்கும் மேற்பட்டோர் சந்தவேலூர் கிராம ஊராட்சி வாக்கு சாவடியில் குவிந்து வாக்களிக்க ஆர்வமாக வரிசையில் நின்று வருகின்றனர்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வாக்கு சாவடியில் நுழையும் வாக்காளர்களுக்கு கையுறை,  சானிடைசர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் 93 ஆயிரத்து 362 வாக்காளர்களும் குன்றத்தூரில் 2 லட்சத்து 72 ஆயிரத்து 554 வாக்காளர்களும் உள்ளனர். இவர்களுக்கென 601 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

அமைதியான முறையில் வாக்களிக்க ஏதுவாக காவல்துறையினரும் ஊர்க்காவல் படையினர் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

30க்கும் மேற்பட்ட நிலை கண்காணிப்பு குழு வாகனங்கள் சுழற்சி முறையில் வாக்குசாவடிகளில் சோதனையிட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News