கொரோனா நிவாரண தொகை ..

காஞ்சிபுரம் 3.60 லட்சம் அட்டைதாரர்களுக்கு நிவாரண தொகை

Update: 2021-05-12 12:45 GMT

கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் தகுதியுள்ள  குடும்ப அட்டைக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ 4ஆயிரம் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது.

தேர்தலில் வெற்றி பெற்ற பின் முதல் தவணையாக கொரோனானா நிவாரண  நிதி வரும் 15 ம் தேதி முதல் 2,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3.60 லட்சம் அட்டைதாரர்களுக்கு இந்த நிவாரண தொகை வழங்கப்பட உள்ளது. இதற்காக, 72.05 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நிவாரண தொகை முறையாக வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க, ஒவ்வொரு தாலுகாவிற்கும் துணை ஆட்சியர் நிலையில், நோடல் ஆபிசர் நியமனம் செய்யபட்டுள்ளது.

மேலும் ஒவ்வொரு 15 ரேஷன் கடைகளுக்கும், ஒரு துணை வட்டாட்சியர் மற்றும் வருவாய் ஆய்வாளர் நியமிக்கபட்டு முறையாக கொரோனா விதிகளுக்கு‌உட்பட்டு வழங்கபடுகிறதா என கண்காணிக்க  உத்திரவிடபட்டுள்ளது..

Tags:    

Similar News