பலத்த மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவை பாதிப்பு

பலத்த மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் பல விமானங்கள் ரத்து, பல விமானங்கள் தாமதம் என விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2023-11-30 15:23 GMT

சென்னை விமான நிலையம் (கோப்பு படம்).

பலத்த மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதன் காரணமாக கடந்த மாதம் மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக வைகை அணையில் தண்ணீர் நிரம்பி வழிந்தது. தற்போது கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தின் மத்திய மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.நேற்று இரவு சென்னையில் விடிய விடிய மழை பெய்தது.இதன் காரணமாக சென்னை நகரமே வெள்ளக்காடானது. பல சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் கார் மற்றும் வாகனங்கள் செல்ல முடியாமல் தவித்தன. பேருந்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

அது மட்டும் இன்றி பலத்த மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில்  இருந்து  சேலம், ஆந்திரா, அபுதாபி, இலங்கை செல்லும் விமானங்கள் உள்பட 8 விமானங்கள்  சேவை ரத்து  ரத்து செய்யப்பட்டுள்ளன. சில விமானங்கள் தாமதமாக வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் இருந்து அந்தமான், ஹைதராபாத், ஹூப்ளி, டெல்லி, மும்பை செல்லும் விமானங்கள் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News