ஈரோடு ரயில்வே மருத்துவமனையில் காசநோய் இல்லா ஈரோடு விழிப்புணர்வு முகாம்

ஈரோடு ரயில்வே மருத்துவமனையில் காசநோய் இல்லா ஈரோடு விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் நடைபெற்றது.;

Update: 2025-02-16 03:45 GMT

ஈரோடு ரயில்வே மருத்துவமனையில் நடந்த காசநோய் இல்லா ஈரோடு விழிப்புணர்வு முகாமில் எடுக்கப்பட்ட படம்.

ஈரோடு ரயில்வே மருத்துவமனையில் காசநோய் இல்லா ஈரோடு விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் நடைபெற்றது.

ஈரோடு மாநகராட்சியில் ரயில் நிலைய பகுதியில் உள்ள ரயில்வே மருத்துவமனையில் பொதுமக்களுக்கு காசநோய் இல்லா ஈரோடு விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் நடைபெற்றது.


இந்த முகாமில் காசநோய் பரவும் விதம், நுரையீரல் காசநோயின் அறிகுறிகள் அதன் பாதிப்புகள், காசநோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியவர்கள், நடமாடும் எக்ஸ்ரே ஊர்தியின் பயன்கள், காசநோய்க்கான சிகிச்சை காலத்தில் அரசால் வழங்கப்படும் உதவித்தொகை மற்றும் ஊட்டச்சத்து உணவின் அவசியம், காசநோய் இல்லா ஈரோடு இயக்க நோக்கம் மற்றும் பயன்கள், காசநோய் ஒழிப்பில் பொதுமக்களின் பங்கு குறித்து சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டது.

இம்முகாமில், ஈரோடு மாவட்ட துணை இயக்குநர் காசநோய் மருத்துவப் பணிகள் அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், ரயில்வே மருத்துவமனை தலைமை மருத்துவர் மரு.தினேஷ் குமார், மருத்துவர்கள் மரு.சௌம்யா, மரு.திருநாவுக்கரசர், செவிலியர் கண்காணிப்பாளர் மெர்லின் சுசீலா, காசநோய் ஒழிப்புத் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மகேந்திரன், சுதன் சர்மா, காசநோய் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் ஹரிஹரன், காசநோய் சிகிச்சை பார்வையாளர் லீலாவதி, நடமாடும் எக்ஸ்ரே ஊர்தி குழுவினர், செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் 150 பேர்கள் கலந்து கொண்டனர்.


மேலும், இந்த முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு காசநோய் விழிப்புணர்வு குறும்படம் காண்பிக்கப்பட்டு ,விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு, நெஞ்சக ஊடுகதிர் பட பரிசோதனை மற்றும் சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Tags:    

Similar News