அந்தியூரில் திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம்

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் திமுக சார்பில் மத்திய பட்ஜெட்டை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.;

Update: 2025-02-09 01:30 GMT

அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் ரவுண்டானா பகுதியில் திமுக சார்பில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் எம்எல்ஏ வெங்கடாசலம் பேசிய போது எடுத்த படம்.

அந்தியூரில் திமுக சார்பில் மத்திய பட்ஜெட்டை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

ஈரோடு வடக்கு மாவட்ட திமுக சார்பில், மத்திய பட்ஜெட்டை கண்டித்து, கண்டன பொதுக்கூட்டம் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் ரவுண்டானா பகுதியில் நேற்று நடந்தது. அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ‌.ஜி.வெங்கடாசலம் தலைமை வகித்தார்.

மாநில தொழிலாளர் அணி துணை செயலாளரும், அந்தியூர் சட்டமன்ற தொகுதி பார்வையாளருமான சி.காசி முன்னிலை வகித்தார். அந்தியூர் பேரூர் செயலாளர் எஸ்.கே.காளிதாஸ் வரவேற்புரை ஆற்றினார்.

கூட்டத்தில், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், வடக்கு மாவட்ட திமுக செயலாளர் என்.நல்லசிவம், மாநில மாணவரணி துணை செயலாளர் வி.ஜி.கோகுல், திமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் ச.அ.பெருநற்கிள்ளி உள்ளிட்டோர் பேசினர். முடிவில், அத்தாணி பேரூர் திமுக செயலாளர் ஏ.ஜி.எஸ்.செந்தில்கணேஷ் நன்றி கூறினார்.

Tags:    

Similar News