ஈரோட்டில் பிளஸ்-2 மாணவனுக்கு பாலியல் தொல்லை: தனியார் பள்ளி ஆசிரியர் கைது

ஈரோட்டில் பிளஸ்-2 மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி ஆசிரியரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.;

Update: 2025-02-16 03:15 GMT

போக்சோ சட்டத்தில் கைது (பைல் படம்).

ஈரோட்டில் பிளஸ்-2 மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி ஆசிரியரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு கருங்கல்பாளையம் ஜெயகோபால் வீதியை சேர்ந்தவர் அலாவுதீன் (வயது 31). இவர், ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

அலாவுதீன் தான் பணிபுரியும் பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 படிக்கும் 17 வயது மாணவனின் செல்போன் எண்ணுக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பி, தனிமையில் சந்திக்குமாறு அழைப்பு விடுத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவன் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்கள் ஈரோடு மாவட்ட குழந்தைகள் நல குழுவினரிடம் புகார் தெரிவித்தனர்.

குழந்தைகள் நலக்குழுவினர் இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார் சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் விசாரணை நடத்தினர். அதில் மாணவருக்கு ஆசிரியர் அலாவுதீன் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது.

இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று அலாவுதீனை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News