அந்தியூரில் 20 ஆண்களுக்கு கருத்தடை சிகிச்சை

அந்தியூர் வட்டாரம் அத்தாணி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆண்களுக்கான நவீன வாசக்டமி கருத்தடை சிகிச்சை முகாம் நடைபெற்றது.

Update: 2023-05-26 15:30 GMT

ஆண்களுக்கு கருத்தடை சிகிச்சை முடிந்த பிறகு உடல் நலம் குறித்து மருத்துவர் சக்திகிருஷ்ணன் கேட்டறிந்த போது எடுத்த படம்.

அத்தாணி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆண்களுக்கான நவீன வாசக்டமி கருத்தடை சிகிச்சை முகாம் நடைபெற்றது. 

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டாரம் அத்தாணி ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஆண்களுக்கான நவீன வாசக்டமி கருத்தடை சிகிச்சை முகாம் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற முகாமில் குடும்ப நல துணை இயக்குனர் ராஜசேகரன் கலந்து கொண்டார். முகாமில், பெருந்துறை பவானி அரசு மருத்துவமனைகளில் இருந்து வந்திருந்த அரசு மருத்துவர்கள், 20 ஆண்களுக்கு வாசக்டமி நவீன கருத்தடை அறுவை சிகிச்சை செய்தனர். முகாமில் மருத்துவ அலுவலர்கள் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுகாதார ஆய்வாளர்கள் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் சுகாதாரத் துறையில் ஒரு புதிய சாதனையாக 20 பேருக்கு வாசக்டமி கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சென்ற வருடம் அந்தியூர் வட்டாரத்தில் மாவட்டத்தில் அதிக அளவாக 18 பேருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், இந்த வருடம் அந்த சாதனையை முறியடித்து, அந்தியூர் வட்டாரத்தில் 20 பேருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக வட்டார மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணனை மருத்துவத்துறையினர் பாராட்டி வருகின்றனர்.

Tags:    

Similar News