ஈரோடு: வணிகர் கோப்பைக்கான போட்டியில் மாமரத்துபாளையம் அணி வெற்றி

ஈரோட்டில் நடந்த வணிகர் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் மாமரத்துபாளையம் அனைத்து வணிகர்கள் சங்க அணி முதல் இடம் பிடித்தது.;

Update: 2025-02-16 02:45 GMT

வணிகர் கோப்பைக்கான பரிசளிப்பு விழாவில் எடுக்கப்பட்ட படம்.

ஈரோட்டில் நடந்த வணிகர் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் மாமரத்துபாளையம் அனைத்து வணிகர்கள் சங்க அணி  முதல் இடம் பிடித்தது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஈரோடு மாவட்ட இளைஞரணி சார்பில் வணிகர் கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மாமரத்துபாளையத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த போட்டிக்கு, ஈரோடு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அ.லாரன்ஸ் ரமேஷ் தலைமையில் தாங்கினார்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள இணைப்புச் சங்கங்களின் உறுப்பினர்கள் மட்டுமே பங்கு பெற்ற இப்போட்டியில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்றன. மொத்தம் 48 ஆட்டங்கள் என ஒரு நாள் முழுவதும் நடைப்பெற்றது.


போட்டியில், முதல் இடத்தை மாமரத்துபாளையம் அனைத்து வணிகர்கள் சங்க அணி முதல் இடத்தை பிடித்து பரிசுத்தொகை மற்றும் கோப்பையும், 2ம் இடத்தை பெரியசேமூர் அனைத்து வியாபாரிகள் நலச் சங்கம் அணியும், 3ம் இடத்தை காலிங்கராயன் அனைத்து வணிகர்கள் சங்க அணியும், 4ம் இடத்தை மூலப்பட்டறை அனைத்து வணிகர்கள் சங்கம் அணியும் பெற்றன.

மேலும், அதிக சிறந்த மட்டையாளர் விருது காளிங்கராயன் அணியை சேர்ந்த நவநீதன், சிறந்த பந்து வீச்சாளர் விருது காளிங்கராயன் அணியை சேர்ந்த ஞானசேகர், சிறந்த பீல்டிங் விருது காளிங்கராயன் அணியை சேர்ந்த அரவிந்த், தொடர் நாயகன் விருது பெரியசேமூர் அணியை சேர்ந்த சதீஸ் ஆகியோர் வென்றனர்.


போட்டி பரிசளிப்பு விழாவில், கோவை மண்டல தலைவர் சூலூர் டி.ஆர்.சந்திரசேகரன், திருப்பூர் மாவட்டச் செயலாளர் லாலா டி.கணேசன், கோவை மாநகர இளைஞரணி அமைப்பாளர் ஆல்வின், திருப்பூர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வினோஜ் குமார், திருப்பூர் மாநகர இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், ஈரோடு மாவட்ட, மாநகர, இளைஞரணி மற்றும் இணைப்புச் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதற்கான, ஏற்பாடினை மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் பீ.ரியாஷ் அகமது, செ.பிரேம்குமார், சி.தங்கராஜ், சி.ஞானசேகர், ர.தீபக், ச.தமிழரசன் ஆகியோர் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News