ஈரோட்டில் அனைத்து ஏற்பாடுகளும் செய்ததால் அமைதியாக ஓட்டுப்பதிவு..!
ஈரோட்டில் அனைத்து ஏற்பாடுகளும் செய்ததால் அமைதியாக ஓட்டுப்பதிவு.அதை பற்றி இப்பதிவில் காணலாம்.;
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், சம்பத் நகர் அம்மன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தனது ஓட்டை பதிவு செய்ய வந்தார். முதல் நபராக மாற்றுத்திறனாளி ஒருவர் காத்திருந்ததால், அவர் ஓட்டுப்பதிவு செய்த பின், தனது ஓட்டை பதிவு செய்துவிட்டு, நிருபர்களிடம் கலெக்டர் கூறியது.
ஓட்டுச்சாவடி விபரம்
தொகுதியில் உள்ள 237 ஓட்டுச்சாவடிகளிலும் காலை 5:45 மணிக்கு மாதிரி ஓட்டுப்பதிவு நடந்தது. பின் சரியாக 7:00 மணிக்கு முறையான ஓட்டுப்பதிவு துவங்கியது.
பூத் சிலிப் விபரங்கள்
வாக்காளர்கள் விபரம் அடங்கிய 'பூத் சிலிப்', ஓட்டுச்சாவடி அலுவலர்கள் மூலம், 90 சதவீதம் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 'பூத் சிலிப்' தவிர, வேறு 12 வகையான ஆவணங்களை கொண்டும் ஓட்டுப்பதிவு செய்யலாம்.
ஓட்டுச்சாவடிகளின் வசதிகள்
அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் குடிநீர், ஷாமியானா, கழிவறை, சாய்வு தளம் போன்ற வசதி செய்யப்பட்டுள்ளன.
ஓட்டுப்பதிவின் கண்காணிப்பு
'சிசிடிவி', வெப் கேமரா அமைத்து அதன் பதிவுகளை, கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், எஸ்.பி., அலுவலக கட்டுப்பாட்டு அறைகளில் நேரடியாக கண்காணிக்கின்றனர். பொது பார்வையாளர்கள் மூலம், நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு, அமைதியாக ஓட்டுப்பதிவு நடக்க செயல்படுகின்றனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
மூன்று மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், பட்டாலியன் போலீசார் கூடுதல் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். பதட்டமான ஓட்டுச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.
வாக்காளர்களின் வரவேற்பு
கடைகள், நிறுவனங்களுக்கு பொது விடுமுறை விடப்பட்டதால், வாக்காளர்கள் முழு அளவில் ஓட்டுப்பதிவு செய்ய வாய்ப்பாகிறது. அமைதியான முறையில் ஓட்டுப்பதிவு நடக்கிறது.
கலெக்டர் ஓட்டு பதிவு செய்த ஓட்டுச்சாவடி
கலெக்டர் ஓட்டுப்பதிவு செய்த 96வது ஓட்டுச்சாவடியில் காலை 5:45 மணிக்கு துவங்கிய மாதிரி ஓட்டுப்பதிவின்போது, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு, மாற்று இயந்திரம் அமைத்து, 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவை தொடர்ந்தனர்.