வன விலங்குகளை விரட்டும் ஒலிப்பான் கருவி

வனப்பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் ரோந்து செல்லும் வன அதிகாரிகளுக்கு பயன்பெறும் வகையில், கையில் தூக்கி செல்லும் அளவுள்ள ஒரு ஒலிபான் கருவியை பேராசிரியர்கள் வடிவமைத்துள்ளனர்.

Update: 2021-01-29 17:50 GMT

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரியின் பேராசிரியர்கள் சஞ்சய்தேவ் மற்றும் ராம்குமார் அடங்கிய குழுவினர் வனப்பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் ரோந்து செல்லும் வன அதிகாரிகளுக்கு பயன்பெறும் வகையில் கையில் தூக்கி செல்லும் அளவுள்ள ஒரு ஒலிபான் கருவியை வடிவமைத்துள்ளனர். வனப்பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியே செல்லும் பொழுது இக்கருவியை கையில் எடுத்துச் செல்லும் அளவிற்கு எடை குறைவாகவும் டார்ச் லைட், அதிக ஒலி எழுப்பும்  வசதிகள் இக்கருவியில் உள்ளது என தெரிவிக்கும் பேராசிரியர்கள் இதன் மூலம் ஏற்படும் ஒலி வனவிலங்குகளை வனப்பகுதிக்குள் விரட்டும் திறன் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இக்கருவியின் செயல்முறை விளக்கம் வழங்கப்பட்டதோடு இக்கருவி கேரளா, கர்நாடகா, மேற்கு வங்காள மாநிலம் உள்ளிட்ட நகரங்களில் உள்ள வனத்துறையினருக்கு வழங்கப்பட்டு பரிசோதனையும்  மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Tags:    

Similar News