அந்தியூர் அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த காட்டு யானை..!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-05-07 11:15 GMT

தண்ணீர் தேடி தாமரைக்கரை குளத்துக்கு வந்த காட்டு யானை.

Erode News, Erode Today News, Erode Live Updates - அந்தியூர் அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. தற்போது, நிலவும் கடும் வெயில் காரணமாக வனப்பகுதிகளில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் வனத்தில் உள்ள விலங்குகள், தண்ணீருக்காக வனத்தை விட்டு வெளியேறி வருகின்றன.

இந்த நிலையில் நேற்று மாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை, பர்கூர் மலைப்பகுதியில் உள்ள தாமரைக்கரை குளத்துக்கு வந்தது. பின்னர், அந்த காட்டு யானை அங்குள்ள தண்ணீரை குடித்தது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், குளத்தில் ஒரு மணி நேரம் படுத்து கிடந்தது.

இதைக் கண்டதும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தங்களுடைய செல்போனில் காட்டு யானையை புகைப்படம் எடுத்தனர். ஆனால் காட்டு யானை எதையும் கண்டுக்கொள்ளாமல் குளத்துத்  தண்ணீரில் படுத்துக் கிடந்தது. 

வனத்துறை யானைகளுக்கு வனத்துக்குள் தண்ணீர் கிடைப்பதற்கு வழிவகை செய்யவேண்டும். யானைகள் மட்டும் அல்லாமல், பிற காட்டு விலங்குகளும் கோடைகாலத்தில் தண்ணீர் இல்லாமல் அலைந்து திரியும்.இதை கருத்திற்கொண்டு வனத்துறை வனத்துக்குள் தண்ணீர் கிடைக்க ஏற்பாடுகள் செய்யவேண்டும் என்று விலங்குகள் னால ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News