கோபியில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி : ஆட்சியர் தலைமையில் ஏற்பு

ஈரோடு மாவட்டம் கோபி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியினை அனைத்து துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.

Update: 2024-06-26 09:30 GMT

கோபிசெட்டிபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியினை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சர்வதேச போதைப் பொருட்கள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியினை அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இன்று (26ம் தேதி) ஏற்றுக்கொண்டனர்.


ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26ம் நாள் சர்வதேச அளவில் போதைப் பொருட்கள் எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி, ஈரோடு மாவட்டத்தில், பள்ளிகள், கல்லூரிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, இன்று (26ம் தேதி) கோபி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில், போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதி மொழியான, போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன்.

நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன். மேலும், எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன். போதைப் பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன்.

போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமார உறுதி கூறுகிறேன் என் அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை பின் தொடர்ந்து வாசித்து உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முகம்மது குதுரத்துல்லா (பொது), உதவி ஆணையர் (கலால்) ஜீவரேகா உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதேபோல், ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி தலைமையில், அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.

Tags:    

Similar News