ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 49.20 மிமீ மழை பதிவு

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 49.20 மி‌.மீ மழை பெய்தது. சத்தியமங்கலத்தில் அதிகபட்சமாக 15 மி.மீ மழை பதிவானது.

Update: 2024-06-26 03:15 GMT

மழை (கோப்புப் படம்).

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 49.20 மி‌.மீ மழை பெய்திருந்தது. சத்தியமங்கலத்தில் அதிகபட்சமாக 15 மி.மீ மழை பதிவானது.

கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், ஈரோடு மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று (25ம் தேதி) மதியத்துக்குப் பின்னர் வானம் இருண்டு மழை வருவதற்கான அறிகுறிகள் தோன்றின.

தொடர்ந்து, மாவட்டத்தில் கவுந்தப்பாடி, கோபி, பவானி, சத்தி, அந்தியூர் உள்ளிட்ட பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான காலநிலை நிலவியது.

மாவட்டத்தில் நேற்று (25ம் தேதி) காலை 8 மணி முதல் இன்று (26ம் தேதி) காலை 8 மணி வரை கடந்த 24 மணி நிலவரப்படி பெய்த மழையின் அளவு விவரம் மில்லி மீட்டரில் பின்வருமாறு:- 

பவானி - 4.20 மி.மீ,

கவுந்தப்பாடி - 5.60 மி‌.மீ,

கோபி - 6.20 மி.மீ,

எலந்தகுட்டைமேடு - 9.20 மி.மீ,

கொடிவேரி - 8.00 மி.மீ,

சத்தியமங்கலம் - 15.00 மி.மீ,

பவானிசாகர் - 1.00 மி.மீ,

மாவட்டத்தில் மொத்தமாக 49.20 மி.மீ ஆகவும், சராசரியாக 2.89 மி.மீ ஆகவும் மழைப்பொழிவு பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News