ஈரோட்டில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
ஈரோட்டில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.;
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
ஈரோட்டில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தையொட்டி கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று (பிப்ரவரி 7ம் தேதி) நடைபெற்றது.
இதற்கு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமை தாங்கி உறுதிமொழியை வாசித்தார். அதனை, ஆட்சியர் அலுவலக அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பின்னர் தொடர்ந்து வாசித்து ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முஹம்மது குதுரத்துலா (பொ), தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெயலட்சுமி உட்பட துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.