அந்தியூர் அருகே பர்கூர் மலைப் பாதையில் கவிழ்ந்த லாரி: உயிர் தப்பிய ஆடுகள்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பாதை வழியாக ஆடுகளை ஏற்றிக் கொண்டு வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.;
பர்கூர் மலைப்பாதையில் சாலையோரம் கவிழ்ந்து கிடக்கும் லாரியை படத்தில் காணலாம்.
அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பாதை வழியாக ஆடுகளை ஏற்றிக் கொண்டு வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கர்நாடக மாநிலம் ராமாபுரம் பகுதியில் இருந்து 50 ஆடுகளை ஏற்றிக்கொண்டு ஈரோடு மாவட்டம் அந்தியூர் வாரச்சந்தைக்கு நேற்று காலை லாரி ஒன்று புறப்பட்டது. லாரியை ராமாபுரம் பகுதியை சேர்ந்த குமார் (வயது 25) என்பவர் ஓட்டினார்.
அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப்பாதையில் வரட்டுப்பள்ளம் அணை அருகே வந்த போது நிலைதடுமாறி சாலையோரம் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் குமார் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
மேலும் அதில் இருந்த ஆடுகள் காயமின்றி தப்பின. உடனே டிரைவர் குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வேறு ஒரு லாரி கொண்டு வரப்பட்டு ஆடுகள் அனைத்தும் ஏற்றி வாரச்சந்தைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதுகுறித்து பர்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.