ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 30 போலீசாருக்கு கொரோனா.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் இதுவரை 30 போலீசார் பாதிக்கப்பட்டுள்ளனர்

Update: 2022-01-20 14:15 GMT

காவல்துறையினருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனை

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தினசரி பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.இதனையடுத்து, மாவட்டத்தில் மீண்டும் போலீசாருக்கு கொரோனா தொற்று பரவி வருகிறது.

நேற்று முன்தினம் வரை, சூரம்பட்டி பெண் ஆய்வாளர், வீரப்பன்சத்திரம் ஆய்வாளர், கடம்பூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் தலைமை காவலர் ஒருவர், பெருந்துறை காவல்  நிலையத்தில் பணிபுரியும் சப் இன்ஸ்பெக்டர்உதவி ஆய்வாளர்,  முதல்நிலை காவலர், பெருந்துறை டி.எஸ்.பி. அலுவலகத்தில் பணிபுரியும் தலைமை காவலர் என மொத்தம் 19 காவல்துறையினருக்கு  கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில், தாளவாடி காவல் நிலையத்தில் காவலர் ஒருவருக்கும், அந்தியூர் காவல் நிலையத்தில் காவலர் ஒருவருக்கும் என நேற்று வரை மாவட்டத்தில் 30 போலீசாருக்கு சளி, இருமல் தொந்தரவு காரணமாக பரிசோதனை செய்ததில் கொரோனா உறுதியானது. இவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி 2-ம் தவணை தடுப்பூசியினை செலுத்திக்கொண்டு உள்ளதால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை.

பின்னர், தடுப்பு நடவடிக்கையாக அனைத்து காவல் நிலையங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு உள்ளது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவலருடன் தொடர்பில் இருந்த மற்ற போலீசாரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு சுகாதாரத்துறையின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News