அத்தாணியில் ஒரேநாளில் 25 பெண்களுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை

Family Planning Operation -அத்தாணி ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஒரேநாளில் 25 பெண்களுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து, மாவட்ட அளவில் சாதனை நிகழ்த்தப்பட்டது.

Update: 2022-09-22 19:15 GMT

முகாமில் பணியாற்றிய செவிலியர்களுக்கு பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.

Family Planning Operation -ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள அத்தாணி கருவல்வாடிபுதூரில் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. நேற்று, பெண்களுக்கான லேப்ராஸ்கோப்பி மூலம் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை சிறப்பு முகாம், இங்கு நடந்தது. இம்முகாமில், தேர்ந்தெடுக்கப்பட்ட 25 பெண்களுக்கு, வட்டார மருத்துவ அலுவலர் சக்திகிருஷ்ணன் தலைமையில் மருத்துவ குழுவினர், குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்தனர். 

மாவட்டத்தில் மொத்தம் உள்ள 14 வட்டாரங்களில், இந்த ஆண்டில் நடந்த குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம்களில் இன்று அந்தியூர் வட்டாரத்தில் நடந்த முகாமில்தான் அதிகபட்சமாக 25 பெண்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து சாதனை படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், இதற்காக பணியாற்றிய கிராம சுகாதார செவிலியர்கள், மற்றும் மருத்துவர்கள், ஊழியர்களுக்கு குடும்ப நலத்துறை துணை இயக்குனர் ராஜசேகரன் பாராட்டு சான்றிதழை வழங்கி பாராட்டினார்.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News