கேரளாவில் 50 சதவீத பஸ்கள் நிறுத்தம்

Today Bus Strike News In Tamil- டீசல் தட்டுப்பாட்டால், கேரள அரசு போக்குவரத்தில் 50 சதவீத பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளது.

Update: 2022-08-08 04:53 GMT

கேரளாவில் 50 சதவீதம் மட்டுமே, அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது.

Today Bus Strike News In Tamil- கேரள அரசு போக்குவரத்து பஸ்கள், கேரளம் மற்றும் பிற மாநிலங்களுக்கு இயக்கப்படுகிறது. போக்குவரத்து கழகத்தின் சராசரி தினசரி வருவாய் ரூ.6.5 கோடியாக உள்ளது. இதில் டீசல் செலவு மட்டும் ரூ.3.5 கோடியாக உள்ளது. தொகையை, எண்ணெய் நிறுவனங்களுக்கு போக்குவரத்து கழகம் வழங்கினாலும், கட்டண பாக்கி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில், கேரள அரசுபோக்குவரத்து கழகம், எண்ணெய் நிறுவனங்களுக்கு தர வேண்டிய கட்டண பாக்கி ரூ.135 கோடியாக உள்ளது. இதனால் எண்ணெய் நிறுவனங்கள் டீசல் வழங்குவதை நிறுத்தி விட்டன.

எனவே போக்குவரத்துக் கழகம் தற்போது, ​​தினமும் பணம் செலுத்தி, டீசல் கொள்முதல் செய்கிறது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐ.ஓ.சி.) நிலுவையில் உள்ள ரூ.123 கோடி மற்றும் வட்டி உட்பட முந்தைய பாக்கியான ரூ.139 கோடியை தீர்க்காமல், டீசல் வழங்க மறுத்துவிட்டது. இதனால், கேரள அரசு போக்குவரத்து கழகம் தனது சேவைகளை குறைத்துள்ளது. 

டீசல் தட்டுப்பாடு காரணமாக, கேரள அரசு போக்குவரத்துக் கழகத்தில் நீண்ட தூர பயண சேவை மற்றும் மாநிலத்தில் 50 சதவீத பஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கேரளாவில், பல பகுதிகளில் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.  கனமழை காரணமாக பஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக, அம்மாநில போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News