கடலூர்:நீர்த்தேக்க தொட்டி குழாயில் ஏற்பட்ட உடைப்பால் வீணாகும் குடிநீர்

கடலூர் கம்மியம்பேட்டை நீர்த்தேக்க குழாய் உடைந்து குடி நீர் வீணாக செல்வதை தடுக்கவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

Update: 2021-09-28 11:29 GMT

இந்த நீர்த்தேக்க தொட்டிக்கு செல்லும் குழாயில் தான் உடைப்பு ஏற்பட்டு உள்ளது.

கடலூர் நகராட்சி 45 வார்டுகளை உள்ளடக்கியது. இதில் ஒரு பகுதி கம்மியம்பேட்டை, இங்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு வசிக்கும் குடும்பத்தினருக்கான  தண்ணீர் தேவைக்காக குடிநீர் தேக்க தொட்டி உள்ளது.  கடந்த சில வாரங்களாக இந்த  நீர்த்தேக்க தொட்டிக்கு நீர் ஏற்றும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஏற்றப்படும் நீரில் பாதி அளவு வீணாகும் சூழல் உள்ளது.

முழுமையாக நீரேற்றப்பட்ட நிலையிலும் கூட தொடர்ந்து குடிநீர் வீணாகி வருகிறது. இப்படி குழாயில் இருந்து வெளிவரும் குடிநீர் அருகில் உள்ள காலி இடங்களுக்கு சென்று குளம் போல தேங்குகிறது. இதனால் டெங்கு கொசு, மற்றும் மர்ம காய்ச்சல் அடிக்கடி ஏற்படுவதாக இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

கடலூர் நகராட்சி உடனடியாக குடிநீர் நீர்த்தேக்க தொட்டியில் ஏற்பட்டுள்ள சேதத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News