கடலூர் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

கடலூர் திருவந்திபுரம் தேவநாத சுவாமி திருக்கோயிலில் கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் இன்றி சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.

Update: 2022-01-14 12:05 GMT

கடலூர் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.

கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் உள்ள தேவநாத சுவாமி கோவில் 108 வைணவ தலங்களில் முக்கியமான ஒன்றாகும். இக்கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்க வாசல் எனும் பரமபத வாசல் திறப்பு விழா  நடைபெற்றது. கடந்த மூன்றாம் தேதி பகல் பத்து உற்சவம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது, நேற்று ஒன்பதாம் நாள் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.

வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பையொட்டி அதிகாலை 3:00 மணிக்கு விசுவரூப தரிசனம் மற்றும் மார்கழி மாத பூஜை நடைபெற்று 5.20 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பக்தர்கள் இன்றி சொர்க்கவாசல் திறக்கப்பட்டு நிலையில் தேவநாத சுவாமி கோவிலின் உள் பிரகாரத்தில் உற்சவர் உலா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

Tags:    

Similar News