தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: 20 கிராமங்களில் வெள்ளநீர் சூழ்ந்தது

குடியிருப்பு பகுதிகளில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல் துறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2021-11-19 13:26 GMT

பெரியகங்கணாகுப்பம் பகுதியில் வெள்ள நீரில் சிக்கிய கல்லூரி மாணவிகளை மீட்பு வீரர்கள் மிதவை படகுகள் மூலம் மீட்டனர்.

தொடர் மழையின் காரணமாக ஆறு மற்றும் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள கெடிலம், தென்பெண்ணை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆறுகளின் இருகரைகளிலும் தண்ணீர் செல்கிறது. கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சாத்தனூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரித்ததால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடலூரில் ஆல்பேட்டை, திடிர்க்குப்பம், கங்கணாங்குப்பம், குண்டு உப்பலவாடி, குமரப்பன் நகர், தியாக நகர், வேலன்நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது.

பெரியகங்கணாகுப்பம் பகுதியில் முப்பதுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் வெள்ள நீரில் சிக்கி இருந்தனர். அவர்களை மீட்பு வீரர்கள் மிதவை படகுகள் மூலம் மீட்டனர். அதேபோல குண்டு சாலை அருகே உள்ள வி எஸ் டி நகர், நடேசன் நகர், குமரப்பா நகர் ஆள் உயர அளவு தண்ணீர் சூழ்ந்ததால் மக்கள் மிகுந்த சிரமங்களுக்கு ஆளாகினர். தற்போது அவர்களை படகுகள் மூலம் மீட்புப் பணியில் மீட்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மாவட்ட நிர்வாகம் முறையான அறிவிப்புகள் ஏதும் அளிக்கவில்லை என்றும், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

Tags:    

Similar News