கடலூரில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு: தமிழகத்திற்கு பாதிப்பா?

ஒரிசா அருகே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ள நிலையில், கடலூரில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Update: 2021-09-13 01:41 GMT

வங்கக்கடலில்,  ஒடிசா கடற்கரை அருகே, பாரதீப் துறைமுகத்திற்கு சுமார் 70 கி.மீ. தொலைவில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது. இது மேலும் வலுப்பெற்று ஒடிசா மாநிலம் சந்தபாலி அருகே, இன்று  கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக, கடலூர், சென்னை, காட்டுப்பள்ளி, எண்ணூர், காரைக்கால், நாகை, புதுச்சேரி துறைமுகங்களில் புயல் தூர எச்சரிக்கை கொடி எண் ஒன்று, நேற்றிரவு முதல் ஏற்றப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தில் நேரடி தாக்கம் இருக்க வாய்ப்பில்லை என்று வானிலை மைய வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags:    

Similar News