கடலூர் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

கடலூர் அரசு கலைகல்லூரி மானவர் சேர்க்கைக்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் நீண்ட வரிசையில் காத்திருத்தனர்

Update: 2021-08-28 12:30 GMT

கடலூர் அரசு கலைக்கல்லூரியில் சேருவதற்கு காத்திருந்த மாணவர்கள்

கடலூர் தேவனாம்பட்டினத்தில் அரசு பெரியார் கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில் கலை மற்றும் அறிவியல் படிப்பிற்கு 19 துறைகள் உள்ளது.

இன்று மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில் மொத்தம் 1329 இடங்களுக்கு சுமார் 9611  மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். இதனால் நீண்ட வரிசையில் கல்லூரி வெளியே தனது பெற்றோருடன் காத்திருந்தனர்.

கல்லூரி நிர்வாகம் இந்த அளவு கூட்ட நெரிசலை எதிர்பார்க்கவில்லை. எனவே அவர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முறையான ஏற்பாடுகள் செய்யவில்லை. இதன் காரணமாக  சமூக இடைவெளி இல்லாமல் மாணவர்கள் நின்று கொண்டிருந்தனர். 

Tags:    

Similar News