கடலூரில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி சாலையோர வியாபாரிகள் போராட்டம்

கடலூரில் பல்வேறு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி CITU சார்பில் மனு கொடுக்கும் போராட்டம்.

Update: 2021-09-07 13:38 GMT

சிஐடியு சார்பில் கடலூர் நகராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் இன்று நடைபெற்றது. கடலூரில் உள்ள சாலையோர வியாபாரிகள் தங்களுக்கு விடுபட்ட சாலையோர வியாபாரிகளை கண்டெடுத்து அடையாள அட்டை வழங்க வேண்டும். ஒன்றிய அரசு பிரதம மந்திரி சாலையோர வியாபாரிகள் ஆத்மநிர்பார் நிதி திட்டத்தின் கீழ் அறிவித்த ரூபாய் 10,000 அனைத்து வியாபாரிகளுக்கும் எவ்வித நிபந்தனையுமின்றி வழங்கிட வேண்டும்,

தமிழக அரசு தேர்தல் அறிக்கையில் கூறியவாறு ரூபாய் 15,000 கூட்டுறவு வங்கி மூலம் வட்டி இல்லா கடனாக வழங்க வேண்டும் சாலையோர வியாபாரிகள் பாதுகாப்பு சட்டத்தின்படி நகர விற்பனைக்குழு மூன்று மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது தேவை ஏற்படும் போது குறைந்த கால இடைவெளியில் கூட்ட வேண்டும் மதுரை மாநகராட்சியில் வழங்குவது போல் சாலையோர வியாபாரிகளுக்கு தள்ளுவண்டி வழங்க வேண்டும் நகர விற்பனைக்குழு 15 பேரில் 6 பேர் சாலையோர வியாபாரிகள் என்பதை மாற்றி மூன்றில் இரண்டு பங்கு என மாற்றம் செய்திட வேண்டும், உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு நகர தலைவர் சுரேஷ்வரன் தலைமையில் கடலூர் நகராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

இந்தபோராட்டத்தில் பழனிவேல், சுப்புராயன், ஆளவந்தார் பாபு சேட்டு ஸ்டாலின் மனோகர் போன்ற பல சாலை வியாபாரிகள் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News