கடலூர் - மடப்பட்டு இருவழிச் சாலை அகலப்படுத்தும் பணி

கடலுார்- மடப்பட்டு சாலை தற்போது 5.5 மீட்டர் முதல் 7 மீட்டர் வரை உள்ளது. தற்போது 10 மீட்டர் அகலத்தில் சாலைகள் அகலப்படுத்தப்படுகிறது

Update: 2021-07-01 06:00 GMT

மாதிரி படம்

கடலுார்- மடப்பட்டு சாலை 41 கி.மீ., துாரத்திற்கு ஆசியா வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் ரூ.231.77 கோடி மதிப்பீட்டில் இரு வழிச் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இச்சாலை கோண்டூரில் துவங்கி, நெல்லிக்குப்பம் நகரம், வாழப்பட்டு, பக்கிரிப்பாளையம் மெயின்ரோடு வரை கடலுார்-சித்துார் சாலையில் வருகிறது.

மக்கள் வசிக்கும் பகுதியில் சாலையின் இருபுறமும் 15 ஆயிரம் மீட்டர் அளவில் கான்கீரீட் வடிகால் அமைக்கும் பணியும் நடக்கிறது.

கடலுார்- மடப்பட்டு இடையிலான 41.7 கி.மீ. தூர பயண நேரம் 90 நிமிடமாக உள்ளது. இத்திட்ட பணிகள் முடிந்தால் பயண நேரம் 60 நிமிடமாக குறையும் . மேலும் பண்ருட்டி நகரத்தில் போக்குவரத்து வெகுவாக குறையும்.

கடலுார்-மடப்பட்டு சாலை திட்டத்திற்காக இரு ஆண்டுகளாக நிலம் கையகப்படுத்தும் பணி நடந்தது.

Tags:    

Similar News