கடலூர் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத் துறையின் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது

Update: 2021-09-25 17:00 GMT

மத்திய கிழக்கு மற்றும் வட மேற்கு வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மேலும் வலுவடைந்து புயலாக மாறியுள்ளது புயலுக்கு குலாப் என்று பெயர் சூட்டப்பட்டது.

இந்த புயலானது தற்போது கலிங்கப்பட்டிணத்திற்கு சுமார் 440 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலம் இடையே கலிங்கப்பட்டினம் அருகே 26 தேதி கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில். புயல் உருவாகியுள்ளது என்பதை எச்சரிக்கும் விதமாகவும், குலாப் புயல் எதிரொலியாகவும் இதன் காரணமாக கடலூர், சென்னை, காட்டுப்பள்ளி, எண்ணூர்,காரைக்கால், நாகை, புதுச்சேரி, தூத்துக்குடி துறைமுகங்களில் புயல் தூர எச்சரிக்கை கொடி எண் இரண்டு (Distant Warning signal No.2) ஏற்றப்பட்டுள்ளது.

இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத் துறையின் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் தங்கள் படகுகளை கடலூர் துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

Tags:    

Similar News