மீன்பிடி தடை காலத்தில் குடும்ப அட்டைக்கு தினமும் ரூ.500 வழங்க கோரிக்கை

மீன்பிடி தடை காலத்தில் குடும்ப அட்டைக்கு தினமும் ரூ.500 வழங்க மீனவர் இயக்கம் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Update: 2022-04-18 02:06 GMT

நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள்.

கடல் வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் தமிழக கிழக்கு கடற்கரை பகுதியிலுள்ள சென்னை முதல் கன்னியாகுமரி வரை ஒவ்வொரு ஆண்டும் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது. இந்நிலையில் ஏப்ரல் 14 முதல் ஜூன் 14 வரை மொத்தம் 61 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் கடலூர் மாவட்டத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்கள் தடை செய்யப்பட்ட 61 நாட்களுக்கு கடலில் சென்று மீன் பிடிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மீன்பிடி தடை காலத்தையொட்டி கடலூர் துறைமுகத்தில் மீனவர்கள் படகுகளை பத்திரமாக நிறுத்தியுள்ளனர். இந்த குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் தங்களுடைய படகுகளையும் வலைகளையும் பழுது பார்க்கும் பணியில் ஈடுபடுவார்கள்.

இந்நிலையில் மீனவர் வாழ்வுரிமை இயக்க நிறுவனத் தலைவர் ஏகாம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது தமிழகம் முழுவதும் 10 லட்சம் மீனவர்கள் உள்ளனர் ஆண்டுக்கு 6000 கோடி வருவாய் ஈட்டும் நிலையில் தற்போது 60 நாட்கள் மீனவர்கள் மீன்பிடித் தொழில் இல்லாமல் சிரமப்படும் இந்த சூழ்நிலையில் சுமார் இரண்டாயிரம் கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் மீனவர்கள் குடும்பங்களுக்கு ரேஷன் கார்டு மூலம் நாளொன்றுக்கு 500 ரூபாய் வீதம் வழங்க வேண்டும் என்றும் தற்போது அரசு வழங்கும் 5000 ரூபாய் என்பது ஒரு பற்றாத ஒரு சூழ்நிலையாக உள்ளது என்றும் மத்திய மாநில அரசுகள் மீனவர்களை பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

Tags:    

Similar News