மழை நீரை அகற்றும் பணி: மாவட்ட ஆட்சியர் எம்எல்ஏ நேரில் ஆய்வு.

கடலூரில் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ள மழைநீரை மின் மோட்டார்கள் மூலம் நீர் அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

Update: 2021-11-09 09:05 GMT

மழைநீர் அகற்றும் பணியை பார்வையிட்ட கலெக்டர் பாலசுப்ரமணியன்

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருவதை தொடர்ந்து கடலூரில் கடந்த 5 நாட்களாக மழை பெய்து வருகிறது. கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட 45 வார்டுகளில் ஏராளமான தாழ்வான பகுதிகளில் மழைநர் சூழ்ந்துள்ளது.

கடலூர் மாவட்டத்திற்கு கன மழை எச்சரிக்கையாக ரெட் அலர்ட் விடப்பட்டிருக்கிறது. கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கடலூர் நகர் பகுதியில் இருந்த நீரை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடலூர் டவுன்ஹாலில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் ஜே சி பி    இயந்திரங்கள் உதவியுடன் 9 குழுக்களை கொண்டு மழைநீர் அகற்றும் பணி மற்றும் தூய்மை பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பாலசுப்ரமணியம், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன்  முன்னிலையில் துவக்கிவைத்தார்.

கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட வில்வநகர் பகுதியில் உள்ள பெருமாள் குட்டையில் கனமழை காரணமாக மழை நீரினால் குடியிருப்பு பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்படாதாவறு மோட்டார் பம்பு மூலம் நீர் வெளியேற்றும் பணிகளையும், தொடர்ந்து காமராஜ் நகர் பகுதியில் கனமழை காரணமாக தேங்கியுள்ள மழைநீரை மோட்டார்பம்பு மூலம் வெளியேற்றுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குண்டுஉப்பலவாடி சப்தகிரி நகரில் உள்ளடி வடிகால்களில் மழை நீர் வடிய ஏதுவாக தூர்வாரும் பணி நடைபெறுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்

Tags:    

Similar News