கொரோனா பாதிப்பால் இறந்தவர்களின் குழந்தைகளுக்கு நிவாரண நிதி: ஆட்சியர் வழங்கல்

கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கு நிவாரண நிதி உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

Update: 2021-11-19 14:39 GMT

கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கு நிவாரண நிதி உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  உத்தரவின் பேரில் கொரோனா வைரஸ் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பெற்றோர்களை இழந்த குழந்தைகளை பாதுகாத்திடும் வகையில், தலா ரூ. 5 இலட்சம் வைப்பீடு, கொரோனா வைரஸ் நோய் தொற்றினால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தையோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு ரூ.3 இலட்சம் நிவாரணத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரணம் நிதியின் கீழ் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு பெற்றோர்களில் ஒருவரை இழந்த 23 குழந்தைகளுக்கு தலா ரூ.3,00,000/- வீதம் மொத்தம் ரூ.69,00,000/-இலட்சத்திற்கான காசோலையினையும், கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு பெற்றோர் இருவரையும் இழந்த 1 குழந்தைக்கு ரூ. 5 இலட்சம் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் (Tamil Nadu Power Finance and Infrastructure Development Corporation Limited) வைப்பீடு செய்தமைக்கான சான்றிதழ்களை அக்குழந்தையின் பாதுகாவலரிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திரு.திருமாவளவன் மற்றும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்கள், பயனாளிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News