கடலூரில் கிராம நிர்வாக அலுவலர்கள் கோட்டாட்சியருக்கு எதிராக போராட்டம்

கடலூரில் வருவாய் கோட்டாட்சியருக்கு எதிராக கிராம நிர்வாக அலுவலர்கள் திடீர் போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2021-09-30 14:21 GMT

கடலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில்  கிராம நிர்வாக அலுவலர்கள் தர்ணா செய்தனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோட்டங்களிலும் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணி மாறுதல் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட வேண்டும் என கடந்த செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.

அதனடிப்படையில் கிராம நிர்வாக அதிகாரிகள் தங்களது சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்த நிலையில் இன்று மாத இறுதி நாள் என்பதால் கோட்டாட்சியரை சந்தித்து பொது கலந்தாய்வு கூட்டம் நடத்த வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் மனு அளிக்க வந்தனர்.

அப்போது கோட்டாட்சியர் அவர்களது மனுவை பெறாமல் புறப்பட்டு சென்றதால் கடலூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது உடனடியாக 2021 ம் ஆண்டிற்கான பொது கலந்தாய்வு தேதியை அறிவிக்க வேண்டும் என கிராம நிர்வாக அலுவலர்கள் கோஷம் எழுப்பினர்.

Tags:    

Similar News