கடலூரில் 4 வது நாளாக தொடரும் மழை-குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த மழைநீர்

கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் தாழ்வான குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது

Update: 2021-11-29 14:05 GMT

கடலூரில் வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளது.

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் பாதிப்புகளில் இருந்து மக்கள் மீளாத நிலையில் கடலூரில் நான்காவது நாளாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக நேற்று இரவு சுமார் நான்கு மணி நேரம் பெய்த தொடர் மழையால் சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது.

வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் தாழ்வான மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வெள்ள நீர் சூழ்ந்த அதே பகுதிகளில் தற்போது தொடர்ந்து பெய்து வரும் கன மழையினால் மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.  காவல் துறை மற்றும் மீட்புப் படை வீரர்களால் மிதக்கும் படகுகள் மூலம் பொதுமக்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது

வெள்ளத்தின் போது காட்டிய அலட்சியத்தை மாவட்ட நிர்வாகம் இந்த தொடர் மழையிலும் காண்பித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நீரை வெளியேற்ற முடியாமல் மாநகராட்சி நிர்வாகம் திணறி வருகிறது

Tags:    

Similar News