கடலூரில் புதிய பாலம் கட்ட திட்டம் தயார்- அதிகாரிகள் ஆய்வு

தேசிய நெடுஞ்சாலைத்துறை, மத்திய தரைக் வழி போக்குவரத்துதுறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

Update: 2021-09-30 17:20 GMT

கடலூரில் புதிய பாலம் கட்டப்பட உள்ள இடத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

கடலூர் நகரின் மையப்பகுதியில் செல்லும் கெடிலம் ஆற்றின் ஒரு கரையில் நகராட்சியின் புதுநகரும், மற்றொரு கரையில் திருப்பாதிரிப்புலியூர் பகுதியும் அமைந்துள்ளது.

இந்த இரண்டு பகுதிகளையும் இணைக்கும் வகையில் கெடிலம் ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் இரும்பு பாலம் கட்டப்பட்டது. நாளுக்கு நாள்  வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் அந்த பாலத்தின் வழியாக வாகனங்கள் சென்று வர மிகவும் சிரமப்பட்டன.

இதையடுத்து இரும்பு பாலத்தின் அருகிலேயே புதிய பாலம் கட்டப்பட்டு அண்ணா பாலம் என்று பெயரிடப்பட்டது. இந்த பாலம் வழியாகத் தான் தற்போது வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடலூர் நகரில்  தற்போது மேலும், மேலும் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அண்ணா பாலம் அருகே புதிய பாலம் கட்ட கோரிக்கை எழுந்து அதன்படி திருப்பாதிரிப்புலியூர் ஆஞ்சநேயர் கோயில் அருகிலிருந்து அண்ணா பாலம் வரை  தனி வழித்தடம், மற்றும் புதிதாக கட்ட உள்ள பாலம் குறித்து தேசிய நெடுஞ்சாலை துறை, மத்திய தரை வழி போக்குவரத்து துறை அதிகாரிகள்  ஆய்வு மேற்கொண்டனர்.

Tags:    

Similar News