கடலுார் கொள்முதல் நிலையத்தில் தண்ணீர் தேங்கி, நெல்மணிகள் நனைந்து வீணாகியது

கடலுாரில் பெய்த திடீர் மழையால், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தண்ணீர் தேங்கி, நெல்மணிகள் நனைந்து வீணாகியது.

Update: 2021-07-12 03:52 GMT

கோப்புப்படம்

தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் துவங்கியதில் இருந்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்கிறது. கடலுார் மாவட்டத்தில் கடந்த 5ம் தேதி பெய்த மழையால், பல இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டை நனைந்தது. நேற்று நள்ளிரவு கடலுாரில் திடீரென மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் நீடித்தது.

திடீர் மழையால், கடலுாரில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.மழையால் கடலுார் தோட்டப்பட்டு, பண்ருட்டி பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் திறந்த வெளியில் அடுக்கி வைத்திருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மற்றும் நெல்மணிகள் குவியல் நனைந்து சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்

தோட்டப்பட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்ட ஒரு மாதத்திற்குள் இரண்டாவது முறையாக மழையால் நெல்மூட்டைகள் நனைந்துள்ளது. எனவே, சேதமான நெல்லை கொள்முதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வரப்படும் நெல்லை பாதுகாப்பாக வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News