நெய்வேலி தனியார் நிதி நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

கடலூர் மாவட்டம் நெய்வேலி தனியார் நிதி நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-12-16 16:05 GMT

நெய்வேலியில் ஐ.டி. ரைடு நடந்த தனியார் நிதி நிறுவனம்.

கடலூர் மாவட்டம் நெய்வேலியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்கு தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் 50 கிளைகள் உள்ளது.

அது மட்டுமன்றி அந்த நிறுவனத்திற்கு சொந்தமான பள்ளிகள் மற்றும் திரையரங்குகள், தங்கும் விடுதிகள் போன்றவை உள்ளது.

இந்நிலையில் இன்று காலை முதல் தனியார் நிதி நிறுவனத்தின் நெய்வேலி தலைமை அலுவலகம், கடலூர், பண்ருட்டி, விருத்தாசலம், வேப்பூர் உள்பட பல்வேறு பகுதியில் உள்ள நிறுவனங்கள் மற்றும் நிறுவனத்திற்கு சொந்தமான பள்ளி, திரையரங்கு, தங்கும் விடுதிகள் என 80க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரை தொடர்ந்து இந்த சோதனை நடைபெற்று வருவதாக வருமானவரித்துறையினர் தகவல்  கிடைத்தது.

இந்த நிதி நிறுவனத்தின் உரிமையாளர் ஜெய்சங்கர் 2016 ஆம் ஆண்டு தே.மு.தி.க. கட்சி சார்பில் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News