கடலூர் திருப்பாதிரி புலியூர் வழியாக புதிய ரயில் சேவை தொடக்கம்

கடலூர் திருப்பாதிரி புலியூர் வழியாக புதிய ரயில் சேவை தொடங்கப்பட்டு உள்ளது.

Update: 2021-09-19 14:22 GMT
கோப்புக்காட்சி

ராமேஸ்வரம் - பைசாபாத்(அயோத்தியா) ரயில் நிலையங்களுக்கு இடையே செப்.19ம் தேதி முதல் வாராந்திர அதிவேக சிறப்பு ரயில் இயக்கப்பட இருக்கிறது இந்த ரயில் திருப்பதிரிபுலியூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும், திங்கட் கிழமைகளில் காலை திருப்பாதிரி புலியூர் ரயில் நிலையத்துக்கு 9.19 க்கு வந்தடைந்து 9.20 க்கு பைசாபாத் நோக்கி கிளம்பி செல்லும், வெள்ளிக்கிழமை மாலை திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையத்துக்கு 5.04 க்கு வந்தடைந்து 5.05 க்கு ராமேஸ்வரம் நோக்கி கிளம்பி செல்லும்

இந்த ரயில் அயோத்தி, ஷாகன்ஜ், ஜான்பூர், ப்ரயாக்ராஜ், சத்னா, ஜபல்பூர், இதர்சி, நாக்பூர், பால்ஹர்ஷா, வாரங்கல், கொண்டபள்ளி, விஜயவாடா, கூடூர், எக்மோர், விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, மானாமதுரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு  ரயுில்வே சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News