நெல்லிக்குப்பம் நகராட்சி துணைத் தலைவர் ராஜினாமா

நெல்லிக்குப்பம் நகராட்சி துணைத் தலைவர் ஜெயபிரபா மணிவண்ணன் தனது பதவியை ராஜினாமா செய்தார்

Update: 2022-03-08 04:05 GMT

பதிவியை ராஜினாமா செய்த நெல்லிக்குப்பம் நகராட்சி துணைத்தலைவர் ஜெயபிரபா

கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் பதவி தி.மு.க. கூட்டணியில் விசிகவுக்கு ஒதுக்கப்பட்டது. விடுதலை சிறுத்தை கட்சியின் கிரிஜா திருமாறன் நகர்மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டார் இதை ஏற்க மறுத்த திமுக தரப்பில் போட்டி வேட்பாளராக ஜெயந்தி ராதாகிருஷ்ணன் களமிறங்கி 23 ஓட்டுகள் பெற்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர்மன்ற உறுப்பினர் கிரிஜா திருமாறன் 3 ஓட்டுகள் மட்டுமே பெற்றார். 3 ஓட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது.  பின்னர் துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் மதியம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தி.மு.க. நகர செயலாளர் மணிவண்ணனின் மனைவியும், 3-வது வார்டு கவுன்சிலருமான ஜெயபிரபா என்பவர் போட்டியிட மனு தாக்கல் செய்தார்.

அப்போது அவருக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி சாார்பில் ஏற்கனவே தலைவர் பதவியில் தோல்வி கண்ட கிரிஜா திருமாறன் போட்டியிட்டார்.  இதில் 29 கவுன்சிலர்களும் பங்கேற்றனர். இதில், 22 ஓட்டுகளை ஜெயபிரபா மணிவண்ணன் பெற்றார்.  கிரிஜா திருமாறனுக்கு 6 ஓட்டுகள் கிடைத்தது. ஒரு ஓட்டு செல்லாதவை என அறிவிக்கப்பட்டது.ஜெயபிரபா நகரமன்ற துணைதலைவராக வெற்றி பெற்றார். இதற்கான சான்றிதழ் அவருக்கு வழங்கப்பட்டதை அடுத்து, அவர் துணைதலைவராக பதவி ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில் கட்சியை உத்தரவை மீறி செயல்பட்டவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டுமென திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் உத்தரவிட்டார் அதன்படி கட்சித் தலைமையை சந்தித்த நகராட்சித் துணை தலைவர் ஜெயபிரபா மணிவண்ணன் பதவி விலகுவதாக தெரிவித்துள்ளார்.

ஆனால், தலைவர் பதவி ஒதுக்கப்பட்ட நிலையில் துணைத்தலைவர் ராஜினாமா செய்துள்ளதை விசிக ஏற்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags:    

Similar News