கடலூரில் நடந்து வரும் திட்டப்பணிகளை நகராட்சி நிர்வாக ஆணையர் ஆய்வு

கடலூர் மாநகராட்சியில் நடைபெறும் திட்டப்பணிகளை நகராட்சி நிர்வாக ஆணையர் பொன்னையா ஆய்வு செய்தார்.

Update: 2022-01-05 05:03 GMT

கடலூில் நடந்து வரும் திட்டப்பணிகளை நகராட்சி நிர்வாக ஆணையர் பொன்னையா ஆய்வு செய்தார்.

கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் தார் சாலை அமைக்கும் பணி கம்மியம்பேட்டை குப்பைக்கிடங்கு உள்ள குப்பைகளை அப்புறப்படுத்தும் பணி உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதனைத்தொடர்ந்து  நகராட்சி நிர்வாக ஆணையர் பொன்னையா மழைநீர் வடிகால் வாய்க்கால் கட்டும் பணிகள், குரங்கு வரி மார்க்கெட் முதுநகர் பக்தவச்சலம் பார்க்கும் மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை திடீர் ஆய்வு செய்தார்.

பின்னர் பணிகள் குறித்து அதிகாரியிடம் கேட்டறிந்தார். மேலும் உரிய காலத்தில் அனைத்து பணிகளும் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அறிவுறுத்தினார். இதுமட்டுமின்றி மக்களுக்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை பணிகளும் உடனுக்குடன் செய்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதில் நிர்வாக பணிகள் இணை இயக்குனர் விஜயகுமார், மாநகராட்சி ஆணையாளர் விசுவநாதன், பொறியாளர் செல்வராஜ், நகர்நல அலுவலர் டாக்டர் அரவிந்த் ஜோதி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News