திமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் பிரச்சாரம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து கடலூர் நகராட்சியில் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் பிரச்சாரம் செய்தார்

Update: 2022-02-16 04:47 GMT

கடலூர் தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் 

45 வார்டுகளை கொண்ட கடலூர் நகராட்சி திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்  மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கடலூர் மாநகராட்சிக்கு திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் 45 வார்டுகளிலும் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.

இதற்கான தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ள நிலையில் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பிரசாரத்தில் பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த எம் சி சம்பத் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு எந்த பணிகளை மேற்கொண்டார் என கேள்வி எழுப்பினார். அதிமுக ஆட்சியில் கடலூர் சீரழிக்கப்பட்டு உள்ளதாகவும், அடிப்படை கட்டமைப்பு மற்றும் சுகாதாரத்தில்  இரண்டே ஆண்டுகளில் சீர்தூக்கி நிறுத்துவேன் என உறுதி அளித்தார். 

எட்டு மாத ஆட்சி காலத்தில் எண்ணற்ற பணிகளை மேற்கொண்டுள்ளது போல, நகராட்சியாக இருந்த இந்த கடலூர் நகராட்சி மாநகராட்சி மாற்றியது போல கடலூரை எழில்மிகு நகரமாக மாற்றி காட்டுவேன் என பேசிய அவர் வேட்பாளரை அறிமுகம் செய்துவைத்து ஆளும் கட்சியை சார்ந்த வேட்பாளரை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

Tags:    

Similar News