கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

கடலூரில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளிடம் அதிக கட்டண வசூலை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Update: 2021-06-10 15:28 GMT

கடலூரில் தனியார் மருத்துவமனைகளில் கொரானா நோயாளிகளிடம் அதிக கட்டண வசூலை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கடலூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கடலூர் ஜவான் பவன் அருகில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம், கட்சி நகர செயலாளர் ஆர் அமர்நாத் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது, 

கடலூர் மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகளில் அரசு தீர்மானித்த தொகையை விட, ரூபாய் 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை கூடுதலாக வசூலிக்கப்படுகிறது  இதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து வரும் புகார்களை முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்திட வேண்டும்.

காப்பீட்டு திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைகளில் இத்திட்டத்தில்  நோயாளிகளை சேர்க்க மறுக்கின்றனர் பணமிருந்தால் மட்டும் மருத்துவமனை சேர்க்கை என்ற நிலை உள்ளது. தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்ற தகுதியான நபர்களுக்கு மருத்துவமனை ரசிது அடிப்படையில் காப்பீடு திட்டத்தில் பயனடைய தமிழக அரசு ஏற்பாடு செய்திட வேண்டும்.

தனியார் ஆம்புலன்ஸ் வண்டிகளுக்கு அரசு நிர்ணயித்த தொகையை விட கூடுதலாக வசூல் செய்யப்படுகிறது இதை  தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்திற்கு தேவையான தடுப்பு ஊசிகளை மத்திய அரசாங்கம் இலவசமாக வழங்கிட வேண்டும் போன்ற கோரிக்கையை வலியுறுத்தினர்

இதில் மாநில குழு உறுப்பினர் கோ. மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கருப்பையன், சுப்பராயன், மாவட்ட குழு உறுப்பினர் ஆளவந்தார், நகர் குழு உறுப்பினர் பால்கி, செந்தில், ஆனந்த்,  திருமுருகன், சேட்டு, பக்கிரான், ஸ்டாலின், கிளை செயலாளர் பாபு, பழனி, மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.

Tags:    

Similar News