பள்ளிகள் திறப்பு: கடலூர் கடற்கரையில் கொரோனா விழிப்புணர்வு மணல் சிற்பம்

பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கொரோனா விழிப்புணர்வு சிற்பம் உருவாக்கப்பட்டிருந்தது

Update: 2021-08-18 15:26 GMT

தூய தாவீது மேல்நிலைப்பள்ளி சார்பில், கடலூர் சோனாங்குப்பம் கடற்கரையில் மணல் சிற்பம் செய்யப்பட்டிருந்தது

கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் வருகிற செப்டம்பர் மாதம் திறப்பு குறித்து மாவட்டம்தோறும் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் பள்ளிகளில் கடைபிடிக்கவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு இன்று வெளியிட்டது.

அதனைத் தொடர்ந்து கடலூர் துறைமுகத்தில் உள்ள தூய தாவீது மேல்நிலைப்பள்ளி சார்பில், கடலூர் சோனாங்குப்பம் கடற்கரையில் மணல் சிற்பம் செய்யப்பட்டிருந்தது.கொரோனா குறித்து பொதுமக்களுக்கும், பெற்றோர்களுக்கும், மாணவ மாணவிகளுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வகுப்பறைக்கு முகக் கவசங்கள் அணிந்து வரவேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் ஒருபுறம் முக கவசம் அணிந்து மறுபுறம் மண்டை ஓட்டு வடிவிலும் வடிவமைக்கப்பட்டு நடுவில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன.

கடலூர் தூய தாவீது பள்ளி ஓவிய ஆசிரியர் செய்த இந்த மணல் சிற்பத்தினை  கடற்கரைக்கு வரும் பலரும் பார்த்து செல்கின்றனர்.

Tags:    

Similar News