விநாயகர் சதுர்த்திக்கு தடை: இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பினர் மனு நகலுடன் பூ, பழம் வைத்து விநாயகரிடம் முறையிட்டு நூதன போராட்டம்.

Update: 2021-09-02 09:04 GMT

விநாயகர் சதுர்த்திக்கு தடை விதித்ததை எதிர்த்து இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர் 

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி வருகின்ற செப்டம்பர் 10ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு தளர்வுகளுடன் ஊரடங்கு கடைபிடித்து வருகிறது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகள் வைக்க அனுமதியில்லை.சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்செல்லவோ, நீர் நிலைகளில் கரைக்கவோ அனுமதியில்லை.நீர்நிலைகளில் சிலைகளை கரைக்க தனி நபர்களுக்கு அனுமதி. என கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து விநாயகர் சதுர்த்தியை பொது இடங்களில் கொண்டாட அரசு தடை அறிவித்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். கடலூர் பாடலீஸ்வரர் ஆலயம் முன்பு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மதுக்கடைகளை திறக்க அனுமதி, விநாயகர் சதுர்த்திக்கு மட்டும் தடையா? என அரசைக் கண்டித்து அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

கோயிலில் கூடுவோம் இறைவனிடம் முறையிடுவோம் கொரானாவை காரணம் காட்டி விநாயகர் சதுர்த்தி திருவிழாக்கு விதிக்கப்படும் தடையை எதிர்த்து இறைவனிடம் முறையிடும் விதமாக கடலூர் இந்து முன்னணி அமைப்பினர் கோவிலுக்குள் சென்று கோரிக்கை மனு நகலில் பூ பழம் வைத்து விநாயகரிடம் முறையிட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து கோயிலுக்கு வெளியே பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

Tags:    

Similar News