கணவன் மீது பொய் வழக்கு; பெண் கைக்குழந்தையுடன் தீக்குளிக்க முயற்சி

போலீசார் பொய் வழக்கு போட்டு கைது செய்து சிறையில் அடைத்ததாகக் கூறி இரண்டு மாத பெண் குழந்தையுடன் மனைவி தீக்குளிக்க முயற்சியில் ஈடுபட்டார்.

Update: 2021-08-09 10:59 GMT

தீக்குளிக்க முயற்சி செய்த பெண் கலைச்செல்வியை போலீசார் மீட்டனர்.

கடலூர் மாவட்டம், திருப்பாதிரிப்புலியூர் குப்பம் குளம் பகுதியை சேர்ந்தவர் சரளா. தனது குடும்பத்தினர் மற்றும் ஊர் பெண்களுடன் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார். அம்மனுவில் கடந்த 16.02.2021 அன்று சுப்ராயலுநகரை சேர்ந்த கனகராஜ் மகன் வீரா(எ) வீரங்கையன் கொலை செய்யப்பட்டார்.

அன்று எங்கள் ஊரில் இருந்த அனைவரும் ஓடிவிட்டோம். அதன் மறுநாள் டிவியில் எனது மகன் விக்கி (எ) விக்ரம் போலிஸாரால் சுட்டு கொன்றதாக செய்தி ஒளிபரப்பு செய்யப்பட்டது. பின்னர் கிருஷ்ணன் சுட்டுக்கொல்லப்பட்டதாக செய்தி வெளியானது. பயந்து கொண்டு பிறகு எனது மகன்கள் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினோம்.

வீரா கொலைக்கும் எனது மகன்கள் விக்கி (எ) விக்ரம், ராக்கி ஆகிய இருவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. அந்த சம்பவத்திலும் இல்லை. அந்த கிருஷ்ணன் என்பவரின் தங்கையை எனது மகன் திருமணம் செய்திருப்பதினால் இந்த வழக்கில் இருவரையும் சேர்த்துவிட்டனர். இந்த கொலையை  செய்த  உண்மை  குற்றவாளிகளை விட்டுவிட்டு என் பிள்ளைகளை சேர்த்து கைது செய்து உள்ளார்கள். இந்த வழக்கில் இருந்து எனது மகன்கள் இருவர் பெயரையும் நீக்க வேண்டுமென மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் விக்ரமின் மனைவி கலைச்செல்வி தனது 2 வயது குழந்தையுடன் திடீரென உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்தார்.அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் கலைச்செல்வி மீது தண்ணீர் ஊற்றி தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டனர். 2 வயது குழந்தையுடன் பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

Similar News