பேஸ்புக் ஐடி தயாரித்து பண மோசடி; விழிப்புணர்வு வீடியோ வெளியீடு

போலி பேஸ்புக் ஐடி தயாரித்து பண மோசடி செய்வது குறித்த விழிப்புணர்வு வீடியோவைவ.கடலூர் எஸ்.பி. வெளியிட்டுள்ளார்.

Update: 2021-07-21 16:31 GMT

கடலுார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன்.

இதுகுறித்த கடலுர் மாவட்ட எஸ்பி., வெளயிட்டுள்ள விழிப்புணர்வு வீடியோவில், கடலூர் மாவட்டத்தில் போலியான பேஸ்புக் ஐடி தயாரித்து பண மோசடி செய்வதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.

ஆகவே ஒரு தனிநபரின் போலியான பேஸ்புக் ஐடி தயார் செய்து அந்த ஐடியில் உள்ள நண்பர்களுக்கு பணம் தேவைப்படுகிறது என்ற குறுஞ்செய்தி மூலம் நண்பர்களுக்கு அனுப்புகின்றனர்.

அது போலியான பேஸ்புக் ஐடி என்று தெரியாமல் அந்த நண்பரும் அவர்களுக்கு பணம் அனுப்பி விடுகிறார்கள்.

ஆகவே கடலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். நண்பர்களுக்கு தொலைபேசி மூலம் பேசிய பின்னரே உறுதி செய்ய வேண்டும். ஏதேனும் சந்தேகம் இருந்தால் உடனே சைபர் சைபர் கிரைம் 155260. என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ள வேண்டும் போன்ற அறிவுரைகளை  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன்  அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News