அரைகுறை ஆங்கிலத்தில் போலீஸிடம் அலப்பறை விட்ட போதை ஆசாமி கைது

அரைகுறை ஆங்கிலத்தில் போலீசாரிடம் அலப்பறை விட்ட போதை ஆசாமியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2021-12-12 02:00 GMT
பைல் படம்

கடலூர் அருகே புதுவை மாநில எல்லையில் ஏராளமான மதுபான கடைகள் உள்ள நிலையில் அங்கு சென்று மது அருந்திவிட்டு வருபவர்களை போலீசார் ஆங்காங்கே பிடித்து மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி வந்ததற்காக அபராதம் விதித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது ஒரு நபர் வாகனத்தை நிறுத்தாமல் சென்றார். அவரை போலீசார் பிடித்தபோது அவர் மது அருந்தி இருந்தது தெரியவந்தது.

போலீசார் அவரிடம் உங்கள் பெயர் என்ன எந்த ஊர் என்று கேட்டதுதான் தாமதம்; நான் திருச்சி, திருநெல்வேலி அல்ல நான் கடலூர் ஓடி பகுதியை சேர்ந்தவன் நான் கடலூர் ஓடி மற்றும் தேவனாம்பட்டினம் கல்லூரியில் படித்தவன். அதனால் என்னை நீங்கள் நிறுத்தக்கூடாது என்னை ஏன் நிறுத்தினீர்கள் என தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் கடகடவென உலரித் தள்ளினார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் ஏன் பொதுமக்களுக்கு இடையூறு செய்கிறீர்கள் என்று கேட்ட போது மீண்டும் நிறுத்தாமல் அவர் ஆங்கிலத்தில் சரியாக பேசுவதாக நினைத்துக்கொண்டு உளறினார். இதனை பார்த்த அப்பகுதியில் உள்ளவர்கள் சிரித்த நிலையில் ஏன் சிரிக்கிறீர்கள் நான் ஆங்கிலத்தில் இலக்கணத்துடன் பேசுகிறேன் என கூறினார்.

பின்னர் பொறுமை இழந்த போலீசார் அவருடைய வாகனத்தை பறிமுதல் செய்ததுடன் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தங்களது பாணியில் சிறப்பாக கவனித்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Tags:    

Similar News