கடலுார் மாவட்ட கோவில்களில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி ரத்து

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடலுார் மாவட்ட கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்ய கலெக்டர் பாலசுப்ரமணியம் உத்தரவு

Update: 2021-08-01 06:01 GMT

கடலூர் கலெக்டர் பாலசுப்ரமணியம்

தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் ஊரடங்கு வருகின்ற 9ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள முக்கிய பிரசித்தி பெற்ற தலங்கள் ஒரு வாரத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு.

தமிழகத்தில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனாவால் கடலுார் மாவட்டத்தில் ஆகஸ்ட் 2ஆம் தேதி ஆடி கிருத்திகை, 3ம் தேதி ஆடிப் பெருக்கு மற்றும் 8ம் தேதி ஆடி அமாவாசையையொட்டி கோவில்களில் பக்தர்கள் அதிக அளவில் பங்கேற்பார்கள், எனவே கொரோனா தொற்று பரவாமல் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக  இன்று முதல் 3ம் தேதி வரையும், வருகின்ற 8ம் தேதி என 4 நாட்கள் பக்தர்கள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை.சிறப்பு பூஜைகள் வழக்கம் போல் நடைபெறும் என  அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Tags:    

Similar News